யாழ்ப் பாணக் குடாநாட்டில் ஊரடங்கு சட்ட நேரத்தைக் குறைக்கவும் மூடப்பட்ட பாதைகளைத் திறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ் குடா ஊரடங்கு சட்டத்தை இரவு 11 மணி முதல் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்துவதென உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ள்ளது.
இதேவேளை, ஸ்டான்லி வீதி, யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மணிக்கூட்டுக் கோபுர வீதி, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி உட்பட சில முக்கிய வீதிகளை பொதுமக்களின் பாவனைக்காகத் திறப்பதென முடிவு செய்யப்பட்டது. யாழ். குடாநாட்டு பொதுமக்கள் முகங்கொடுத்து வருகின்ற முக்கிய சில பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர், டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.
யாழ். மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துதல், வீதித் தடைகளை அகற்றுதல், யாழ். மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள், பாதுகாப்பு அனுமதி பெறுவதில் முகங்கொடுக்க நேரிடுகின்ற சிரமங்களை அகற்றுதல், தற்காலிக நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் முகங்கொடுத்துள்ள குறைபாடுகளை நீக்குதல், ஊரடங்குச் சட்டத்தை நீக்குதல், சோதனைச் சாவடிகளை அகற்றுதல், தடைசெய்யப்பட்ட பொருட்களின் தடைகளை அகற்றுதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.
யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், வலிகாமம் பிராந்திய படை அதிகாரி, யாழ். அரச அதிபர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். ஊரடங்குச் சட்டத்தை முற்றாக அகற்றுவது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்ட போதிலும், சில சமூக சீர்கேடுகளை கருத்தில் கொண்டு விழிப்புக்குழுக்கள் பரவலாக உருவாக்கப்படுதல் மற்றும் தமிழ் பொலிஸாரை பொலிஸ்துறையில் இணைத்துக் கொள்ளல் போன்ற சிவில் நிர்வாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் வரை தற்போதைக்கு இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பில் திட்ட வரைபொன்று உருவாக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது.
இதேநேரம், இராணுவ வாகனத்தொடரணி போக்குவரத்தின் போது மக்கள் முகங்கொடுக்க நேரிடுகின்ற அசெளகரியங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுமெனவும், பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்கான பாதுகாப்பு அனுமதி கிடைப்பதில் ஏற்படுகின்ற தாமதங்கள் அகற்றப்படும் என்றும், பல வீதிகளில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடிகளை படிப்படியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. பருத்தித்துறை வரணி ஊடான கொடிகாமம் வீதி, மக்கள் பாவனைக்காக திறக்கப்படுவது குறித்து ஆராய்வதாக தீர்மானிக்கப்பட்டது.
இதேநேரம், யாழ் லொறி உரிமையாளர்களது ஏ-9 பாதையிலான போக்குவரத்து தொடர்பிலும் ஆராயப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலதிக நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், ஏ9 பாதையில் வரையறுக்கப்பட்ட பயணிகள் பஸ் சேவையை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
யுத்தம் காரணமாக யாழ். குடாநாட்டிற்கு கொண்டு வர தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களின் தடையை நீக்குவது தொடர்பில் அமைச்சர் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடுவதாகக் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Vannikumaran
சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் சுமுகமாக தடுப்பு முகாமில் இருந்து ஆட்களை வெளியே எடுத்து விட 20 லட்சம் முதல் அவரவரின் வயது குற்றங்களுக்கேற்ப கப்பம் வேண்டுகிறார் .
காசு வேண்டி வெளியே வந்தவர்களின் தகவலை வேறு இராணுவத்தினருக்கு கொடுத்து இரண்டு மூன்று நாட்களுக்குள் அவர்களை கொலை செய்தும் விடுகிறாராம் என்ற கொடுமையான செய்தி ஒன்று தெரிவிக்கிது. எரிகிற வீட்டில புடுங்கின கொள்ளி லாபம் எண்டது இதுதான் போலை
வன்னிக் குமரன்
chandran.raja
மழைவிட்டாலும் தூவானம் போகவில்லை. புலம்பெயர் நாட்டில்லிருந்து என்னமாதிரி கதைகளையெல்லாம் நிமிடத்திற்கு நிமிடம் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பணம் கொலைகள் பழிபோடுதல் பொய்யான பிரச்சாரங்கள்களை தமது மூலதனமாகக் கொண்ட “புலிகளின்சகாப்தம்” மேமாதம் 19-ம் திகதி முடிவுக்கு வந்ததும்மல்லாமல் தாங்கள் புலியா பூணையா என்பதையும் தெளிவாக உலகத்திற்கு காட்டிவிட்டார்கள் வரும் காலத்தில் எல்லா அரசியலும் சரியாகநடைபெறுமா? லஞ்சம் ஊழல் இல்லாத இலங்கையை முழுமையாக காணமுடியுமா என்பதை யாரும் உறுதியாகக் கூறமுடியாது.ஆனால் அந்த லட்சியத்திற்காக கனவு காண்பதும் அதற்காக பாடுபடுவதுமே நாம் இழந்ததை மீட்டுக்கொள்ளுகிற ஒவ்வொரு தமிழனனுடைய கடமையாக இருக்கவேண்டும்.
வன்னிக்குமரன் அவர்களே! உங்கள் மனம் விரக்தியடைந்து புண்பட்டு போனதை நாம் அறியாமல் இல்லை இனிமேலாவது நாட்டுமக்களுக்கு பயன்படும் விதத்தில் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கப்படும் பட்சத்தில் முன்வையுங்கள். யுத்தத்தில்நலிவடைந்து போயிருக்கும் மக்களைதூக்கி நிறுத்துவதற்காக எதையும் திருத்திக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.
msri
எனக்கு தெரிந்தவரையில் டக்ளசு பலரை தடுப்புமுகாமில் இருந்து (காசுவாங்கி)வெளியில் எடுத்து விடுவதுமல்லாமல்> வெளிநாட்டிற்றிற்கும் அனுப்ப உதவுகின்றார்! இதில பல புலிகளும் வெளியேறியிருக்கின்றனர்! நல்லவிடயம்தானே!
Muraly
வன்னிக்குமரன் உமது விரக்தியின் வெளிப்பாடு புரிகிறது.நாம் அறிந்த வரை இன்று வன்னி மக்களுக்கு உதவி செய்யும் ஒரே ஒரு தலைவர் டக்ளஸ் மட்டுமே.உமது உறவினர்களோ நண்பர்களோ முகாம்களில் இருந்தால் கேட்டுப்பாரும் உண்மை புரியும். உதவி செய்பவருக்கு உபத்திரவம் செய்யாமல் இரும்.வன்னி மக்களை புலிகள் செய்த கொடுமை முகாம் வரை கொன்டு வந்துள்ளது. அஙுகு மக்கள் படும் கொடுமைக்கு டக்ளஸ் கூட இல்லா விட்டால் புலிகளை நம்பி புலிகளுக்காக வாள்ந்த மக்கள் நாதியற்றூ போவார்கள்.உமக்கு வசை பாட விரும்பினால் எம்மக்களை அகதியாக்கி முகாம்களிலும் முட்கம் பிகளுக்கும் பின்னால் வாள காரணமான புலிகளையும் புலிகளுக்கு ஆலோசனை வளஙகி எம் போராட்டத்தை தோற்கடிக்க சகல உதவிகளும் செய்த புலம்பெயர் புலி ஆதரவாளர்களையும் வசைபாடும்.
Modan
ஐயா ஆரம்பிச்சிட்டிஙகளா ஒருத்தன் சனஙகளுக்கு உதவி செய்தால் உஙகளுகு பிடிக்காதே. ஏதாச்சும் சொல்லி அமுக்கிடுவீஙக. சில்லரத்தனமா கருத்தெளுதிக்கொன்டு இருக்காமல் செய்ற ஆளுக்கு உற்சாகம் குடுக்கப்பாருஙக. அப்பத்தான் எஙக சனம் கொன்சமாவது சாப்பிடும்.புரியுதா???
BC
chandran.raja, Muraly, Modan சொன்னது சரியான கருத்து.