இந்த ஆண்டின் ஜூன் மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் புத்தளம் மாவட்டத்தில் 191 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் ஆறு பேர் இந்நோயினால் மரணமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.கே.ரத்நாயக்க, மழைகாலம் ஆரம்பமாகி யுள்ளதால் டெங்கு நோய் மேலும் பரவும் ஆபத்து இருப்பதால் டெங்கு நோய் பரவுவதைத் தடுக்க சகலரும் ஒன்றுபட்டு முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் முந்தல், மாரவில, கல்பிட்டி, ஆராச்சி கட்டு,மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆறு பேர் டெங்கு நோய்க்கு ஆளாகி மரணமடைந்துள்ளனர். புத்தளம் மாவட்டத் தில் தங்கொட்டுவ பிரதேசத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.