யூன் மாதம் 20ம் (இன்று)திகதி சனிக்கிழமை லண்டன் மாநகரில், முள்வேலியின் பின்னால் நிற்கும் மக்கள் மீட்கப்பட்டு அவர்கட்கு இயல்பு நிலை வாழ்க்கை ஏற்படுத்தித் தரப்பட வேண்டும் என்பதனை அடிநாதமாகக் கொண்டு மாபெரும் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள சகல அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களையும் இணைத்து பிரித்தானிய தமிழர் பேரவையால் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1. காணாமல் போனவர்கள் மீட்கப்பட வேண்டும்.
2. முகாம்களில் வாழும் மக்கள் இயல்பு நிலைக்கு மீளவேண்டும்.
3. இனப்படுகொலையை நிகழ்த்தியோரும் அதனை மூடி மறைப்போரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
என்பவையே இப்பேரணியில் மையப்படுத்தப்பட்டுள்ள கோரிக்கைகளாகும். ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாக இலங்கை அரசு அறிவித்தபின்னர் நடைபெறும் இப்பேரணி மேற்குலக அரசுகளினாலும் ஊடகங்களினாலும் உற்று நோக்கப்படுகின்றன.
பார்த்திபன்
முன்பு புலிகளை விட்டு இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் பெரும்தொகை மக்கள் வந்தபோது, அம்மக்களை இதே பிரித்தானிய தமிழர் பேரவை; தலைவனை விட்டு வெளியேறிய துரோகிகள் என்று தூற்றினார்கள். இன்று அம்மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனரோ?? உண்மையில் அம்மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமென்றால் அதனை இந்தப் பேரணிகளால் ஒன்றும் செய்து விட முடியாது. அதற்கான எத்தனையோ ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் செய்யலாம். அப்படியான நடவடிக்கைகள் தான் இன்றைய காலத்தின் தேவை.
BC
சரியாக சொல்லியுள்ளீர்கள் பார்த்திபன். இவர்கள் நோக்கம் அம்மக்களுக்கு நன்மை செய்வதிற்காக அல்ல. அம்மக்களை சொல்லியே தங்கள் இருப்பை தங்கவைத்து தொடர்ந்தும் பணம் பிடுங்குவதற்காகவே.
sekaran
ஊர்வலம் போவதும் கோஷம் போடுவதுமாய் 73 நாட்கள்(?)இவர்கள் எதைத்தான் சாதித்தார்கள்? தின்று குடித்து கும்மாளம் போடுகிற இந்தக்கூட்டத்தை விட அங்கே அத்தனை பொருளாதார கஷ்டத்திலும் ஒருநாள் சம்பளத்தையாவது அந்த அகதிகளுக்காக கொடுத்து அவர்கள் நன்றாயிருக்கவேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுகிறார்களே! அந்த சிங்கள முஸ்லிம் தமிழ் சராசரி மக்களின் அன்பையும் கனிவையும் விடவா?
anpu
பிரித்தானியா தமிழர் பேரவை ரி-வை- ஒ மற்றும் ஜிரிவி-ஜபிசி-புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் – புலிகள் இயக்கம் இவர்கள் யாரும் மக்களுக்காக என்ன செய்தார்கள் இவர்கள் எல்லோரும் தங்கள் தலைவனுக்கு சொன்னார்கள் தலைவா கட்டளையிடு எமது புலிகள் களமாடுவார்கள் என்று உரக்கக் கத்தினார்கள் அந்தநேரம் தமது பிள்ளைகளை இங்கே தனியார் பள்ளிகளில் படிக்க விட்டுவிட்டு கஸ்ரப்பட்டவர்களையும் -தலித்துக்களையும் களமாடவே எதிர்பார்ததனர்.
அது மட்டுமல்ல புலிகளின் பெயரால் மக்களக்காக என்றெல்லாம் சேர்த்த பணங்கள் இவர்கள் பெயரில் அல்லது இவர்களின் உறவினர்கள் பெயரிலேயே உள்ளது அதில் பலர் இன்று இனிமேல் எமது தலைவன் போய்விட்டான் இன்று ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டு லண்டன் புலிகளின் தலைவர்களுக்கு தண்ணீர் காட்டி விட்டனர்.
இந்த பிரித்தானிய தமிழர் பேரவை(ரி-வை- ஒ)ஜிரிவி-ஜபிசி- மற்றும் புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் – புலிகள் இயக்கம் இவர்கள் யாரும் மக்களுக்காக என்ன செய்தார்கள்
இந்த மேற்கூறிய அமைப்புக்கள் கடந்தகபலங்களில் என்னவெல்லாம் செய்தார்கள் என்ன நடந்தது இவர்கள் இங்கிருந்து அங்கு தலைவரை என்ன செய்யச் சொல்லவேண்டும் என்றெல்லாம் பேசினரோ இப்படியான இவர்களின் பேச்சுக்களின் பாணியை கூட இவர்களோடு புலிகளுக்கு புலிகளாக இருந்து செயற்ப்பட்ட பிரித்தானிய அமைப்பு (பிரிஎப்)ஆதரவாளர் அரசாங்கத்திற்கு உளவு கொடுத்து புலிகளுக்கு சவக்குழி கொடுத்தனர்.
இவர்கள் கடந்தகாலத்தில் செய்த போராட்டங்ஙகளில் என்ன பயன் கிடைத்தது ஒன்றுமில்லை காரணம் இவர்களே அரசின் கூலிப்பட்டாளமாகவும் செயற்ப்பட்டனர். இவர்களை கூலிக்கு அமர்த்துவது ஒன்றும் கடினமாக அரசுக்கு இருக்கவில்லை.
இவர்கள் எல்லோரும் மக்களின் துரோகிகள் மக்களை பெருந்தொகையாக கொலைக் களத்தில் விட்டுதுலைவரை காப்பாற்ற யோசித்தவர்கள் அல்லது பிரபாகரனின் பேய் நாட்டை உருவாக்க திட்டம் தீட்டியவர்கள் ஆனால் இயற்கை வென்றது துரோகக் கும்பல் அழிந்தது.
பொறுத்திருங்கள் இவர்கள் அழியும் காலம் மிக விரைவில் புலிகளக்கு 30 வருடம் இவர்களுக்கு 3 வருடம் சிலவேளை கிடைத்த காசுடன் ஓடுவார்கள்.
புலிகள், புலிகள் ஆதரவு அமைப்புக்கள இவைகள் தாம் தமிழர்க்கு முஸ்லீம்களுக்கு செய்த துரோகத்தை மூடி மறைத்துக்கொண்டு வரவார்கள் இவர்களால் எதுவுமே தமிழர்க்கு செய்யமுடியாது. இவர்களை நம்பக் கூடாது புலிகளடன் கர்மச் சொத்துடன் ஓட்டம் பிடிக்க வைக்க வேண்டும்.
குழந்தைகளக்கு சயனைட்டை கொடுத்து சாகடித்துவிட்டு குண்டைக்கட்டி அனுப்பிவிட்டு தாம் குடும்பத்துடன் வாழ சரணடைந்தவர்கள்.
இவர்களத நோக்கம் எல்லாம் துரொகத்தனமாக சேர்த்த பணத்தை சுருட்டுவதும் மேலும் ஏமாற்றிப் பணம் சேர்த்து கொள்வதும் தான் (உதாரணம்- வணங்காமண் -கப்டன் அலியாகியது).
இந்த பிரித்தானிய தமிழர் பேரவை(ரி-வை- ஒ)ஜிரிவி-ஜபிசி- மற்றும் புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் – புலிகள் இயக்கம் -புலிக் கொடி இவைகளை தலைவருடன் சேர்த்து புதைகுழிக்குள் அனுப்ப வேண்டும். இவை பு(ப)லிகளின் துரோகச்சின்னமாகும் மறந்துவிட வேண்டாம்.
palli.
என்ன கொடுமையப்பா; இத்தனைக்கு பின்னும் இன்றும் புலி கொடியுடன் பேய் வலம் போகும் இந்த வியாபாரிகளை எந்த அரசும் கண்டிக்காதா? எயிற்ஸ் வியாதியை எப்படி மாற்ற முடியாதோ அப்படிதான் இந்த கொடிய வியாதியும்; தெரிந்தும் செய்யும் தவறு; அது போல் இதுவும் தன்னைமட்டுமல்ல தான் சார்ந்தவர்களையும் அழித்து விடும்.
GHHD
சரியாக சொல்லியுள்ளீர்கள் பார்த்திபன், அன்பு. இவர்கள் நோக்கம் அம்மக்களுக்கு நன்மை செய்வதிற்காக அல்ல. அம்மக்களை சொல்லியே தங்கள் இருப்பை தங்கவைத்து தொடர்ந்தும் பணம் பிடுங்குவதற்காகவே
thurai
தமிழர்களை ஆள விரும்பியவர்களே ஈழவிடுதலை என்னும் மாய வலையில் அப்பாவித்தமிழர்களை விழுத்தியவர்கள். இன்று புலத்தில் ஆள முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆட்டு மந்தைபோல் புலத்தில் சிலர் உள்ளார்கள் தாங்கள் மேய்பதற்கு என்பதை காட்டவே பேரணிகள்.
துரை