அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு 950 டொக்டர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இன்னும் இரண்டொரு வாரங்களில் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
950 டாக்டர்களில் 122 பேர் வட மாகாணத்தில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இவர்கள் நிரந்தரமாகவே வடக்கில் பணியாற்றுவார்கள் என்றார். வடக்கு வசந்தத்திற்கு ஒரு உந்து சக்தியாகவே 122 டொக்டர்களும் அங்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.