இலங் கையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக உயாந்துள்ளதென தொற்று நோய் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் பீரிஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களே இந்நோய்தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
இம்மாதம் 14ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலிருந்து 5 சிறுவர்கள சிங்கப்பூரினூடாக இலங்கை வந்தடைந்தனர். இவர்களுள் இரு சிறுவர்கள் ஏற்கனவே இந்நோய்த் தாக்கத்துக்கு உட்பட்டுள்ளனர். இதனையடுத்து அக்குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய 3 சிறுவர்களும் தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர்.
இதன்போதே ஏனைய இரண்டு சிறுவர்களும் இந்நோயத் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது. தற்போது இந்த 5 சிறுவர்களும் தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.