மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீத் நேற்றுப் பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்தார். நேற்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் வந்திறங்கிய மாலைதீவு ஜனாதிபதியை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹ{ஸைன் பஹிலா வரவேற்றார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இங்கு வருகை தந்துள்ள மொஹமட் நசீத் இன்று அநுராதபுரத்துக்கு விஜயம் செய்யவுள்ளதோடு அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாலைதீவு ஜனாதிபதி இன்று முற்பகல் 11.00 மணிக்கு கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.