இலங்கை அரசாங்கம் அதன் வெளிவிவகார நடவடிக்கைகளில் மேற்குலக நாடுகளுக்குச் சார்பான கொள்கைகளைப் பின்பற்றாது அணிசேராக் கொள்கையையே கடைபிடித்து வருகிறது என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அயல் நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தும் நோக்குடனேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.