நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு பாரிய அளவில் உதவி வழங்கி வரும் நாடுகளின் ஒன்றான தென் கொரியாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனப் பிரதிநிதிகளுக்கு தங்கியிருந்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு வசதிகள், வரப்பிரசாதங்கள் மற்றும் வரிச்சலுகை வழங்குவதற்கான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் பதில் நிதியமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டியவே சமர்பித்திருந்தார்.