கல்வி யியல் கல்லூரிகளில் பயிற்சிகளை நிறைவு செய்த மூவாயிரம் மாணவர்களில் 295 பேருக்கு கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நியமனங்களை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வியியல் கல்லூரியின் இறுதிப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கமைய நியமனம் வழங்கப்படுமெனவும் ஏனைய நியமனங்கள் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கேற்ப வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் 7 வருடங்களுக்கு அதிகமாக சேவையிலீடுபட்டுள்ளவர்களுக்கு அவர்களது சொந்த இடங்களுக்கு இடமாற்றங்களை வழங்கும் முகமாகவே இந்நியமனங்களை வழங்கவுள்ளதாகத் தெரிவித்த கல்வியமைச்சின் செயலாளர் மேல் மாகாணசபையைச் சேர்ந்த கல்வியியல் கல்லூரி இறுதிப்பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு மேல் மாகாணத்தில் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.