டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் நோய்பரவுகைத் தடுப்பு பிரிவு மருத்துவ அதிகாரியான மனோரி கீத்தாஞ்சலி நேற்றுத் தெரிவித்தார்.
இக்காய்ச்சல் காரணமாக நேற்று வரையும் 134 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 9400 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.இக்காய்ச்சலுக்கு மே மாதத்தில் மாத்திரம் நாலாயிரம் பேர் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் கண்டி, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, கேகாலை போன்ற 12 மாவட்டங்களில் இக்காய்ச்சல் தொடர்ந்தும் தீவிர நிலையில் காணப்படுகின்றது என்றும் கூறினார்.
இதன் காரணத்தினால் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை ஒழித்து சுற்றாடலை சுத்தமாகவும், உலர் நிலையிலும் வைத்திருப்பதில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுவே நுளம்புகள் பரப்புகின்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரிதும் உதவும் எனவும் அவர் கூறினார்.