பிரிட்டனில் ஹீலி என்ற இடத்தில் பெண்கள் மீது பாலியல் இம்சையை மேற்கொண்ட நான்கு குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட அச்சல தத்தலாகே என்ற இலங்கை இளைஞனை நாடுகடத்துமாறு பிரிட்டிஷ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பருக்கும் ஜனவரிக்கும் இடையில் ஹீலி பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று தடவைகள் 27 வயதுடைய இந்த இளைஞன் பாலியல் இம்சைக் குற்றங்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகள் நடந்துவரும் போது இவர் பாலியல் ரீதியான சேஷ்டைகளை புரிந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. நியூ ஹாசில் எனுமிடத்தில் ஹீலி வீதியில் வசிக்கும் அச்சல டிசம்பர் 23 இல் தேவாலயம் அருகே 2 பெண்களை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அவர் கார் தரிப்பிடத்திற்கு செல்லும் படிக்கட்டில் 17 வயதுடைய பெண்ணொருவர் மீது அங்க சேஷ்டை மேற்கொண்டுள்ளார். பிரதிவாதியான அச்சல ஹீலி பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணி கற்கைநெறியை பயின்று வருகிறார். 4 பாலியல் சேஷ்டை குற்றச்சாட்டுகள் இவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவரைக் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி ரொபர்ட் ரிவர் ஜோன்ஸ், அச்சலவுக்கு 22 மாதகால சிறைத்தண்டனை வழங்கியதுடன் அவர் தன்னாலான விதத்திலே நாடுகடத்தப்பட உள்ளார் என தெரிவித்திருக்கிறார். அத்துடன், 10 வருடங்களுக்கு பாலியல் குற்றவாளிகள் டாப்பில் அவர் கைச்சாத்திட வேண்டுமென நீதிபதி பணித்துள்ளார். .