இலங் கையின் வடக்கில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக சின்னாபின்னமான இடங்களைப் புனரமைத்து அப்பகுதி மக்களுக்கு இயல்பான வாழ்வை மீளப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய பணியாகுமென மியன்மார் தலைவர் தான் ஷிவி நேபேதோரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மியன்மாருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அங்கு சென்றுள்ள ஜனாதிபதிக்கும் அந்நாட்டின் தலைவருக்குமிடையிலான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் பயங்கரவாதத்துக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கையை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ய முடிந்தமைக்காக இச்சந்திப்பின்போது தனது திருப்தியை வெளியிட்ட ஜனாதிபதி, நாடு வெற்றியடைந்ததன் பின்னர் மியன்மாருக்கே தாம் முதலாவது வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பௌத்த மதத்தின் போதனைகளின்படி எல்லா உயிர்களும் சமாதானத்துடனும் நல்லுறவுடனும் வாழ முடியும் என்றும் ஜனாதிபதி இச்சந்திப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.