யுத்தம் முடிவுக்கு வந்த பின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு – வாழைச்சேனை (ஏ-15) பிரதான வீதியில் அமைந்திருந்த கும்புறுமுலை இராணுவ முகாம் மற்றும் சோதனைச்சாவடி ஆகியன இன்று திங்கட்கிழமை முதல் முற்றாக அகற்றப்பட்டுள்ளன. பல வருடங்களாக கும்புறுமுலை முச்சந்தியில் அமைந்திருந்த இவ் இராணுவ முகாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான முகாம்களில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது