இலங் கையில் போரால் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா முகாம்களில் குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளில் பெரும் பற்றாக்குறை காணப்படுவதாக ஜ.நா. கூறியுள்ளது.
இடைத்தங்கல் முகாம்களில் சுமார் ஆறாயிரம் கழிப்பறைகள் தேவைப்படும் நிலை இருக்கிறது என்றும் ஆனால் இதுவரை சுமார் மூவாயிரம் கழிப்பறைகளே கட்டப்பட்டிருப்பதாக ஐ.நா.மன்றம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 50 பேருக்கு ஒரு கழிப்பறை என்ற நிலையே அங்கேயிருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது.
இந்த குறைபாடுகள் தொடர்பில் தமிழோசைடம் கருத்து வெளியிட்ட இலங்கை மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன், கழிப்பறைகளை அமைக்கும் பணியை தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டுவருவதாகவும், கூடியவிரைவில் தேவையான அளவுக்கு கழிப்பறைகள் கட்டிமுடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொண்டு நிறுவனங்கள் முகாம்களில் செயலாற்றுவதில் அரசாங்கம் தடைகளை விதிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.