நாடாளு மன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசர கால சட்டத்தை நீடிப்பது தொடர்பான வாக்களிப்புக்கு சமூகமளிக்காமை தொடர்பில், வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வழமை போலவே அவசர கால சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைவரும் எதிராக வாக்களித்த வேளையில், சிவநாதன் கிஷோர் அந்த வாக்களிப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.
இந்த நிலையில், கூட்டமைப்பின் அடுத்த நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தின் போது, இது தொடர்பிலான காரணம் பகிர வேண்டும் என சிவநாதன் கிஷோரிடம் கோரியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி, சுதந்திரமாக செயற்படவோ அல்லது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவோ முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.