ஆப்கா னிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான தமது நடவடிக்கையில், மேலும் கூடுதலாக பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அங்கு அனுப்புவது அமெரிக்காவுக்கு சாதகமான ஒரு நிலைய ஏற்படுத்தும் என்று தாம் நம்புவதாக அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் 2001 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு அவர்களால் நடத்தப்படும் தாக்குதல்கல் மிக அதிக அளவுக்கு தற்போதுதான் உயர்ந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் நடைபெறும் மோதல்களில் பொதுமக்களுக்கு உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் அதை குறைப்பதற்குமே முன்னுரிமை அளிக்கப்படுவதாக பிரஸ்லஸில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
அங்கு ஏற்படும் ஒவ்வொரு ஆப்கானியரின் உயிரிழப்பும் அங்குள்ள சர்வதேசப் படைகளுக்கு ஏற்படும் ஒரு தோல்வியே என்றும் அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர ஊடப் பிரச்சாரத்தினை சமாளித்து பதிலடி கொடுக்கும் முகமாக அங்கு தமது தரப்பிலிருந்து பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடுதாலன பணமும் மனித சக்தியும் செலவழிக்கப்படும் என்று ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.