பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை கௌரவிக்கும் நோக்கத்துடன் “கோதாபய றெஜிமென்ட்’ என்ற இராணுவப் பிரிவை உருவாக்கவேண்டுமென பௌத்த கோட்பாட்டு சபை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கேட்டுள்ளது. இது தொடர்பாக அந்தச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை கௌரவிக்கும் நோக்கத்துடன், “கோதாபய றெஜிமென்ட்’ என்ற இராணுவப் பிரிவை உருவாக்கவேண்டும். கோதாபய நாட்டுக்குச் செய்த சேவைக்கு மதிப்பளித்து இதனை மேற்கொள்ளவேண்டும்.
கோதாபய படையினரை சரியான முறையில் வழிநடத்தியிருந்தார். நாட்டின் எல்லாப் பகுதியையும் படையினர் கைப்பற்றியது பாராட்டத்தக்கது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயர் சரித்திரத்தில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும். துட்டகைமுனு, பராக்கிரமபாகு, கஜபா, அசீலா ஆகியோரின் பெயர்களுடன் மகிந்தவின் பெயரும் பொறிக்கப்பட வேண்டும். மகிந்த நீண்டகாலம் வாழவேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
palli.
சந்தனம் மெச்சினால் தடவடா பக்கத்து வீட்டு சுவரில் என்பது போல் உள்ளது இந்த செயல்; எது எப்படியோ ஜயாவுக்கு ஆயுள் தண்டனை உறுதி; எப்படியா? எப்ப ஒரு மனிதன் பாதுகாப்பில்லாமல் ஒரு பொதுஇடத்துக்கு (பதவியில்லாமல் இருக்கும் போது) போகமுடியாதோ அதுதான் உன்மையான ஆயுள்தண்டனை: இந்த வகையில் இவர் காலை கடன் கழிக்ககூட தனியாக செல்ல முடியுமா என்பது சலாமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றம் நடத்த வேண்டுமே.