இந்திய எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.ஸீ நிறுவனத்துடனான உடன்படிக்கையில் திருத்தம் கொண்டுவருது குறித்து கவனம் செலுத்தி வருவதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் ஏ. எச்.எம். பௌசி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய உடன்படிக்கைக்கு ஏற்ப அரசாங்கம் எரிபொருள் நிறப்பும் நிலையம் ஒன்றை திறந்தால் ஐ.ஓ.ஸீ. நிறுவனத்துக்கும் நிலையம் ஒன்றைத் திறப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நிறுவனம் இதுவரை 300 எரிபொருள் நிறப்பும் நிலையங்களைத் ஆரம்பிப்பதற்கு விண்ணப்பித்துள்ளது. எனினும் இதற்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதற்கான அனுமதியை வழங்காமல் இருக்கவே உத்தேசிப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
மீட்கப்பட்ட வட பகுதியிலும் எரிபொருள் நிறப்பும் நிலையங்களைத் திறப்பதற்கு தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.