வட பகுதி மக்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமானப் பணிகளுக்கு மியன்மார் அரசு 5.5 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந்தப் பணத்தை மியன்மார் வெளிநாட்டமைச்சர் நயன்வின் தனது அமைச்சில் வைத்து அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் நிவ்டன் குணரத்னவிடம் இன்று கையளித்தார்.
இந்தப் பணம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.