களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பிரதேசவாசிகளுக்கும் இடையே இன்று காலை மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இம்மோதலின் போது வீதியில் சென்ற வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து பிரதான வீதி வழியான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு, பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதல் சம்பவத்தையடுத்து, களனிப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிவிக்கப்படுகிறது. எனினும் மருத்துவ பீடம் வழமைபோல் இயங்குமென பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன