எல்.ரீ.ரீ.ஈ. யுடனான மோதலின்போது சின்னாபின்னமாக்கப்பட்ட வட பகுதியின் விவசாயத்துறையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு இந்தியா உதவ வேண்டுமென இந்திய பேராசிரியர் சுவாமிநாதனிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையெனக் கருதப்படும் பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் ஜனாதிபதியை நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அலரிமாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது வட பகுதியில் விவசாயத்துறையில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையிலான புதிய உந்து சக்தியொன்று அவசியமென பேராசிரியர் சுவாமிநாதனிடம் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புலிகளுடனான மோதல்கள் காரணமாக சீர்குலைக்கப்பட்டுள்ள வட பகுதி மக்களின் வாழ்வாதார தொழில்கள் மீளவும் கட்டியெழுப்பப்படும் எனத் தெரிவித்தார்.
எல்.ரீ.ரீ.ஈ.யினரின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் மிகவும் துயரங்களுக்குள்ளான வடக்கு வாழ் மக்களிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாகுமெனக் கூறிய ஜனாதிபதி, வடக்கில் மீளக்குடியமர்த்தப்படவுள்ள மக்கள் அவர்களது வாழ்வாதார தொழிலான விவசாயத்துறையில் பின்பற்ற வேண்டிய உத்திகளை திட்ட வரைபாக சமர்ப்பிக்குமாறு பேராசிரியர் சுவாமிநாதனிடம் வேண்டுகோள் விடுத்தார்
kanakaratnam
இதுவே சரியான நடைமுறை இதை நாம் பின்பற்ற வேண்டும் இதன் மூலம் இந்திய உதவிகளை பலவழிகளிலும் பெற வேண்டும்
மாயா
தமிழர்களுக்கு விடிவை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியவராக மகிந்த அவர்களே இருக்கிறார்கள். மகிந்த அவர்கள் அளவுக்கு பலம் வாய்ந்த சிங்களத் தலைவர் ஒருவர் இதுவரை சிங்களத் தலைமையாக இருந்ததில்லை. மகிந்த அவர்களால் முடியாத எதுவும் வேறு எவராலும் முடியாது. எனவே மகிந்த அவர்களை பலப்படுத்துவது தமிழர்களுக்கு விடிவைத் தரும்.
இதுவரை சிங்களவர்களுக்கு முன்னுரிமை வழங்க உருவான சிறீலங்கா சுதந்திரக் கட்சி பண்டா குடும்பத்தின் ´அரசியல் அஸ்தமனத்தின் பின்னர் மகிந்த சிந்தனையூடாக அனைத்து இலங்கையருக்கான கட்சியாக மாற்றுத் திசையில் பயணிக்க ஆரம்பித்தது. இது இனி இனவாதமற்ற அரசியல் கட்சியாக அனைத்து இனத்தையும் ஒன்றிணைக்கும் கட்சியாக மாற்றம் பெறும்.
ஐதேகட்சி இனவாதமற்றதாக காட்டிக் கொண்டாலும் இனவாதமானமான கட்சியாக திரை மறைவில் செயல்பட்டு வந்தேயிருக்கிறது. எனவே ஐதேக முரண்பாடுகளோடு கரையத் தொடங்கியுள்ளது.
மகிந்தவின் ஆட்சி இனவாத சிங்களவர்களுக்கும் கடிவாளமாகியிருக்கிறது. இதுவே சுதந்திர அனைத்து மக்களது தாயமான இலங்கையின் ஆரம்பம்.