ஏ15 என அழைக்கப்படும் திருகோணமலை மட்டக்களப்பு நெடுஞ்சாலை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் ஒருங்கிணைந்த திருகோணமலை உட்கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பல மில்லியன் ரூபா இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை கொழும்பு வீதியிலுள்ள 4 ஆம் மைல் கல் சந்தியிலிருந்து ஓட்டமாவடியிலுள்ள திருக்கொண்டியா மடு சந்தி வரையான வீதிப் புனரமைப்பும், அதன் கீழ் வருகின்ற 5 பாலங்கள் நிர்மாணமும் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது 4 ஆம் கட்டைச் சந்தியிலிருந்தும், திருக்கொண்டியாமடு சந்தியிலிருந்தும் வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறால்குழி பால நிர்மாணத்துக்கான ஆரம்பக் கட்ட வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிண்ணியா, மூதூர், வெருகல், வாகரை ஊடாகவே ஏ15 நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டம் நிறைவடைந்ததும் இப்பகுதிகள் அதிக வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சைனா ஹாபர் பொறியியல் நிறுவனம் இந்தப் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.