அவசர காலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கு பாராளுமன்றம் நேற்று (09) அங்கீகாரம் வழங்கியது.
சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகளும், எதிராக ஏழு வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரேரணைக்கு எதிராக வாக்களித்தது.
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க முன்வைத்த பிரேரணை மீதான விவாதம் நிறைவடைந்ததும், வாக்கெடுப்புக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா சபாநாயகரிடம் கோரினார்.
எனினும் வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் மாத்திரமே எதிராக வாக்களித்தனர். கூட்டமைப்பைச் சேர்ந்த சிவநாதன் கிஷோர் எம்.பி. வாக்களிக்காது நடுநிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அவருக்கு தமது மகிழ்ச்சியைத் தெரிவித்து பாராட்டைத் தெரிவித்தனர்.
rohan
இலங்கையில் உள்ள எல்லாக் கட்சிகளையும் – தமது கட்சி உட்பட – உடைத்த பெருமை கொண்டோர் ராஜபக்ச சகோத்ரர்கள். கூட்டமைப்பு மட்டும் தான் தப்பியிருந்தது. இப்போது அவர்களும் bowled போலத் தெரிகிறது. ஆனாலும், அவசரகாலச் சட்டத்தை ஒரு விதத்தில் ஆதரிக்க என்ன காரணத்தை கிஷோர் காட்ட முடியும்?