நாட்டின் பல பகுதிகளிலும் வீதிகளைப் புனரமைக்க கடந்த மூன்று வருடங்களில் 9444.5 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியதாக அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலா பிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
யுத்தம் ஒன்று இடம்பெற்ற போதும் வீதிப்புனரமைப்பு வேலைகள் நூறு வீதம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக் காட்டினார். வீதிப் பராமரிப்பு நிதியத்திலிருந்து வீதி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சுக்கு கடந்த 2006 இல் 2934 மில்லியன் ரூபாவும், 2007 இல் 3410 மில்லியன் ரூபாவும், 2008 இல் 3103.5 மில்லியன் ரூபாவும், ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.