ஐ.சீ.சீ. உலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இன்று தனது முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்தாடவுள்ளது. இரண்டாவது உலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்தில் ஆரம்பமானது. இன்றைய போட்டியில் இலங்கை அணி அதன் புதிய தலைவரான குமார் சங்கக்கார தலைமையில் முதன்முதலாகக் களமிறங்கவுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா இலங்கை அணியுடனான இன்றைய போட்டியிலும் தோல்வியுற்றால் தொடரில் இருந்து நீக்கப்படலாம் என அறிவிக்கப்படுகிறது.