போர் நிறைவடைந்துவிட்டதாக அரசு அறிவித்திருப்பதால் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு நாம் முன்வந்துள்ளோம்

vanangaaman-captainali.jpg“கப்டன் அலி’ (வணங்கா மண்) நிவாரணக்கப்பல் விவகாரத்தில் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படவுள்ளதாக “வணங்கா மண்’ அமைப்பின் உறுப்பினரான அர்ஜுனன் எதிர்வீரசிங்கம் தெரிவித்துள்ளார். லண்டன் பி.பி.சி.செய்திச்சேவைக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்; வணங்கா மண் கப்பலில் 880 தொன் உணவுப் பொருட்களையும் மருத்துப் பொருட்களையும் அனுப்பிவைத்துள்ளோம்.

இடம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களுக்காக புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களால் சேகரிக்கப்பட்ட உணவு, மருத்துப்பொருட்கள் இக்கப்பலில் உள்ளன. சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாக அனுப்பப்பட்ட அக்கப்பலை இலங்கை கடல்வலயத்துக்கு அப்பாலுள்ள 18 மைல் தூரத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை, கப்பலிலுள்ள மாலுமிகளை இலங்கை கடற்படையினர் தயவாக அணுகியுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த தமிழ்த் தொண்டர் ஒருவரும் ஐஸ்லாந்தைச்சேர்ந்த கண்காணிப்பாளர் ஒருவரும் இக்கப்பலில் உள்ளனர்.

போர் நிறைவடைந்துவிட்டதாக அரசு அறிவித்திருப்பதால் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு நாம் முன்வந்துள்ளோம்.

தமது உறவுகள் குறித்து புலம்பெயர் மக்கள் மிகுந்த கவலை கொண்டுள்ள நிலையில் இந்த நிவாரணப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க அரசு அனுமதி அளிக்குமென நாம் நம்புகின்றோம்.  அத்துடன், இவ்விடயத்தில் இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • ramesh
    ramesh

    இந்த “பனங்காமண்” என்ற கப்பல் எவ்வித அனுமதியுமில்லாமல் இலங்கையின் எல்லைக்குள் அத்துமீறி உட்புகுர எண்ணியது,
    “திறந்த வீட்டுக்குள் ஏதோ நுளைந்தது போலல்லவா இருக்கின்றது”.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //போர் நிறைவடைந்துவிட்டதாக அரசு அறிவித்திருப்பதால் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு நாம் முன்வந்துள்ளோம்.//

    யார் காதில் பூச் சுற்றுகிறார்கள். அரசு போர் முடிந்து விட்டடதாக அறிவிக்கும் முன்னரே இவர்களது பயணம் ஆரம்பித்து விட்டது. அத்துடன் உண்மையாக உதவ நினைப்பவர்கள் அதற்கான முறையான அனுமதிகளையும் பெற்றல்லவா வந்திருக்க வேண்டும். வீராப்புப் பேசி புறப்பட்டவர்கள் இன்று வெட்டிப் பேச்சு பேச வேண்டிய நிலை……..

    Reply