பிரான் ஸின் வட பகுதியில் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னாள் இதே தினம் கூட்டணிப் படைகள் காட்டிய வீரம் வரலாற்றின் போக்கையே மாற்றியது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
பிரான்ஸின் நோர்மாந்தி பிராந்தியத்தில் ஒரு சிறிய கடற்கரைப் பகுதியில் நடந்த யுத்தம், இருபதாம் நூற்றாண்டில் காணப்பட்டிருந்த முன்னேற்றங்களோடு பெருமளவில் தொடர்புடையது என்று அவர் குறிப்பிட்டார்.
அந்தக் கடற்கரைப் பகுதியில் கிடைத்த வெற்றி நாஜி ஜெர்மனி மீது கூட்டணிப் படைகள் வெற்றிகொள்ள வழிவகுத்திருந்தது.
D-Day என்று கூறப்படுகின்ற தினத்தன்று மிக மோசமான மிக உக்கிரமான சண்டைகள் நடந்திருந்த ஒமாஹா கடற்கரையில் அமைந்துள்ள அமெரிக்க போர் வீரர்களின் கல்லறைகளிலிருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா D-Day நினைவு தின சடங்கில் இதனைத் தெரிவித்துள்ளர்.