யாழ்ப்பாணத்துக்கு “ஏ9′ தரை வழிப்பாதையூடாக அதிக பொருட்கள் எடுத்து வருவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. தற்போது வராந்தம் 17 லொறிகளில் மட்டுமே பொருட்கள் எடுத்துவரப்படுகின்றன. இனி வாரத்தில் நாற்பது லொறிகளில் பொருட்களை எடுத்துவர அனுமதிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு 17 லொறிகளில் பொருட்களை எடுத்துவர ஏற்பாடாகியுள்ளது. இதில் சைக்கில்கள், வாளிகள், உணவுப்பொருட்கள், கூட்டுறவுசங்கத்திற்கான பொருட்கள், மின்சார உபகரணங்கள் எடுத்து வரப்படுகின்றன. பொருட்களை எடுத்துவருபவர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தால் தாராளமாக விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன,