ஜனாதிபதியின் பாரியார் நேற்று யாழ்ப்பாணம் விஜயம்:

06siranthi.jpgசங்க மித்த பிக்குனி வெள்ளரசு மரக்கிளையுடன் வந்திறங்கிய யாழ்ப்பாணம், வடமராட்சியிலுள்ள தம்பகொலபட்டுன என்றழைக்கப்படும் பகுதிக்கு ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ் நேற்று விஜயம் செய்தார்.

அங்குள்ள தம்பகொலபட்டுன விகாரையில் சங்கமித்த பிக்குனியின் உருவச் சிலையொன்றையும் ஜனாதிபதியின் பாரியார் பிரதிஷ்டை செய்தார். இப்பகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் பாரியார் மற்றும் அவர் தலைமையிலான குழுவினரை வட்டுக்கோட்டைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாதகல், பொன்னாலை, காரைநகர் பிரதேசவாசிகளின் பிள்ளைகள் கோலாகலமாக வரவேற்றனர்.

இப்பிரதேச வாசிகளுக்கு ஜனாதிபதியின் பாரியார் தலைமையில் இயங்கும் சிறிலிய சவிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னூறு (300) உலர் உணவுப் பொதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

“இப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் வசதிகளையும், உட்கட்டமைப்பு துறையையும் மேம்படுத்தத் துரித நடவ டிக்கை எடுக்கப்படும்” என்று இளைஞர்களுக்கு நாளை அமைப்பின் ஸ்தாபகர் நாமல் ராஜபக்ஷ இச்சமயம் உறுதியளித்தார்.

இவ்வைபவங்களில் ஜனாதிபதியின் பாரியாருடன், பிரதமரின் பாரியார் குசும் விக்கிரமநாயக்கா, கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, திருமதி கரன்னாகொட உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். நயினாதீவு விகாராதிபதி நவந்தகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரோ பெளத்த வழிபாடுகளை முன்னின்று நடத்தினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • msri
    msri

    இவ 2-வது சங்க மித்த> அசோகச் சக்கரவர்த்தி எதைச் செய்தானோ> அதையே இந்த மகிந்தச் சக்கரவர்த்தியும் செய்து> அந்த சங்க மித்த வந்த இடத்திற்கு> இந்த “சங்க மித்த பிக்குனியையும்” அனுப்பியுள்ளார்!> இலங்கையில் சிறுபான்மை என்ற ஒன்றே இல்லை!> எல்லாம் பெரும்பான்மையே! எனக் கொள்ளுங்கள்> என மகிந்தா சொல்லாமல் செய்கின்றார்!

    Reply
  • rohan
    rohan

    ஜயவேவ ஜயவேவ

    சமய ஒருமைப்பாடு வாழ்க வாழ்க

    ராஜபக்ச குடும்பம் வளர்க வளர்க

    Reply
  • Vannikumaran
    Vannikumaran

    இதென்ன புதுக்கதை சங்கமித்தை யாழ்ப்பாணம் வந்தவ எண்டு .அப்ப புத்த பிக்குகள் மகாவம்சத்தையும் துவசம் பண்ணிவிட்டினம் எண்டு சொல்லுங்கோ.
    வரலாற்று பேராசிரியர்களே இந்த நேரத்தில் நீங்களுமா சேர்ந்து ஜால்றா போடுறியளா?
    வன்னிக்குமரன்

    Reply
  • accu
    accu

    யாருமே எதையுமே கதைக்காதீர்கள் எங்கள் தலைவன், சூரியத்தேவன், மேதகு எல்லாத்தையும் செய்வான் என்று கூறி மற்றவர்களை ஏளனம் செய்தவர்கள் இப்படி ‘ஜயவேவ ஜயவேவ’ எனப் பைத்தியம் பிடித்துப் புலம்பப்போவதும் நாம் ஏற்கெனவே கணித்ததுதான்.

    Reply
  • thevi
    thevi

    மதியக்கா போக வேண்டிய இடமெல்லாம் அவா போகின்றா. சில மணித்தியாலங்களில் எல்லாம் தலைகீழாய் போனது.

    Reply
  • palli
    palli

    ஜெசுநாதர் உய்ர்தெழுந்த நாளாக கொண்டாடுவது போல் எமக்கும் ஒரு நாள் வரலாம்; அதுக்கு முன்னால் அரசியல் (தமிழர்) அவதிபட போவது
    யாரும் மறுக்க முடியதா பொய்யா? உன்மையா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இதென்ன புதுக்கதை சங்கமித்தை யாழ்ப்பாணம் வந்தவ எண்டு.- வன்னிக்குமரன் //

    நீங்கள் சிறுவயதில் கூட சரித்திரம் படிக்கவில்லையா?? சங்கமித்தை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து இறங்கிய அந்த குறிப்பிட்ட இடம் மாதகலில் தான் உள்ளது. வெறுமனே புலிகளின் இணையத்தளங்களை மட்டும் பார்த்துவிட்டு இதுதான் இலங்கையின் சரித்திரம் என்றிருக்காமல், உண்மையான சரித்திரங்களையும் அறிந்து கொள்ள முயலுங்கள்.

    இந்த சங்கமித்தை வேறு யாருமல்ல, சிலப்பதிகாரத்தில் வந்த கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    “இந்த சங்கமித்தை வேறு யாருமல்ல, சிலப்பதிகாரத்தில் வந்த கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள்” என்று நான் தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன். “மணிமேகலை” தான் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள். பின்னாளில் இவரும் தனது வாழ்க்கைகயை ஒரு பெளத்த துறவியாகவே தொடர்ந்தார். தவறுக்கு வருந்துகின்றேன்.

    Reply