இலங்கை துடுப்பாட்ட அணியை பகிஸ்கரிக்க கோரி பிரித்தானியாவில் தமிழ் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

20-20landon.jpgபிரித் தானியாவில், மனித உரிமைகளைக் காக்கத் தவறிய நாடுகளை துடுப்பாட்டத்தில் இருந்து விலக்கிவைப்பது போன்று, இலங்கை அணியையும் விலக்கி வைக்க வேண்டுமெனக் கோரி தமிழ் மாணவர்கள் போட்டி ஆரம்ப தினமான நேற்று லோட்ஸ் மைதானத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அரசினால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் பற்றிய விபரங்கள் தற்போது பிரித்தானிய ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் 20க்கு 20 துடுப்பாட்ட போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி பிரித்தானியாவிற்கு வந்துள்ளது. மனித உரிமைகளைக் காக்கத் தவறும் நாடுகளை துடுப்பாட்டத்தில் இருந்து விலக்கி வைப்பது வழக்கம். அது போன்று இலங்கை அணியையும் விலக்கி வைக்க வேண்டுமெனக் கோரி தமிழ் மாணவர்கள் நேற்று லோட்ஸ் மைதானத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • palli.
    palli.

    பார்த்து இந்த அனாகரிகமான ஆர்பாட்டமே தடைசெய்யபட்ட இயக்கத்தை ஆதரித்த குற்றத்துக்காக நாடு திருப்பி அனுப்ப சட்ட மூலம் நடவெடிக்கை எடுக்க புள்ளி வைப்பது போல் ஆகி விடும், கண்ணாடி வீட்டில் நின்று கல்லெறிவது இதுதானா? அல்லது புகைத்தல் உடல்நலத்துக்கு கேடாகலாம் என சொல்லுவது இதுதானா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி,
    உங்கட பல கருத்துகளில் நான் ஒத்துப்போறவன். ஆனால் இதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் என்ன புலியளையும் விளயாட சேருங்கோ எண்டே புரொட்டஸ்ற் பண்ணினவங்கள்? செய்தியை கொஞ்சம் சரியாக வாசியுங்ககள்? ஸ்ரீலங்கா மனித உரிமை மீறாத நாடு எண்டு சொல்லுறியளே?

    Reply
  • palli.
    palli.

    சாந்தன் திரும்பவும் பல்லியின் பின்னோட்டத்தை வாசிக்கவும்; விளையாட்டு என்பது எதிரி நாடுகள் கூட விளையாடலாம்; அதில் அரசியல் பேசடாது; இலங்கை அரசாங்கம் அத்துமீறும் செயலை பல்லி பல இடத்தில் சுட்டிகாட்டி உள்ளேன்; ஆனால் அதுக்காக விளையாட்டை கேவலபடுத்தலாமா?? அதுகூட கிரிக்கட் ரசிகரை எம்மீது தவறான ஒரு நிலையை கொண்டு வர வாய்ப்பிருக்கு; ஏன் இவர்கள் அரசாகம் செய்த இலங்கை அரசின் தூதரகம் லண்டனில் இருக்க கூடாது அல்லது இந்தியாவின் தூதரகம் ஜரோப்பாவில் இருக்ககூடாது என போராடலாமே; எந்தஒரு ஆர்பாட்டமாவது எமது கருத்தை சொல்லும் போது நாம் வாழும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமையவே செய்ய வேண்டும்; அதை விட்டு ஜ வோண்டுத ரமில் ஏலம் என்பது போல் ஆர்பாட்டம் நடத்துவது எமக்கு எதிரிகளை அதிக அளவில் சம்பாதிப்பதாய்தான் இருக்கும்;

    ஒரு சம்பவம் பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் வீரர்மீது தாக்குதல் நடத்தியபோது நான் வாழும் நாட்டில் இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்; இது எமது கையால் ஆகாதனம் இல்லையா?? பாரிஸ் கால் பந்தாட்ட வீரர் ஸிடான் இறுதியாக நடந்த உலக கோப்பை போட்டின் இறுதி ஆட்டத்தில் ஏதோ தவறு செய்து ஆட்டத்தில் இருந்து நீக்கபட்டார் இது அனைவரும் அறிந்ததுதான்; ஆனால் அவரை அதன் பின்பு பேட்டி கண்ட பத்திரிகை நிருபர் அவரிடம் அந்த நிகழ்வு பற்றியும் தோல்வி பற்றியும் கேப்பார்; அதுக்கு ஸீடான் கூறுவார் வெற்றி தோல்வி சகஸம்தான்; ஆனால் எனது விளையாட்டை ரசித்து கொண்டு இருந்த குழந்தைகளை நான் ஏமாற்றி விட்டேன் அதுக்காக அவர்களிடம் மன்னிப்பு கெக்கிறேன்; அதேபோல் அதுக்கு தண்டனையாக இனிவரும் காலங்களில் எனது விளையாட்டை அந்த குழந்தைகளுக்காகவே அர்பணிப்பதாக; இதுக்கு பின்னும் ஆர்பாட்டத்தை தாங்கள் நியாயபடுத்தினால் பல்லி என்ன செய்ய முடியும்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி,
    முதலில் உங்கள் பின்னூட்டம் புலிகள் பற்றி இருந்தது. அதற்கு நான் எழுதிய கருத்துக்கு பதில் என்ன?பதிலிறுக்காமல் வேறு விடயங்களை இழுக்கிறீர்கள்.மேலும் உங்கள் பதிவில் ‘சட்ட திட்டங்கள்’ என வேறு சொல்கிறீர்கள். கொஞ்சம் விளக்கிச் சொல்லலாமே? சட்டத்தினை மீறினால் பொலிஸார் கவனிக்க வேண்டிய விடயமல்லவா?

    இதேபோல பல போராட்டங்களில் (வேறொரு நாட்டில்) நான் பங்கேற்கிறேன். அப்போது அங்கு வரும் அந்நாட்டவர் எம்மை ஊக்குவித்தனர். சிலரோ எமது துண்டுப்பிரசுரங்கலை நீட்டும்போதே தாம் போராடும் மக்களுக்கே ஆதரவு என கூறி ஊக்கப்படுத்துவர். அத்துடன் நாம் கூட ஆரம்பிக்கும் போதே பொலிசார் இன்முகத்துடன் எம்மை விசாரித்து எமக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டி அவ்விடம் திருப்திகரமானதா இல்லை மாற்றி தர வேண்டுமா எனவும் கேட்பர். இது வரை யாரும் எம்மைக் குறை கூறியது இல்லை.இத்தனைக்கும் புலிகளுக்கு பணம் சேகரிப்பது அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

    நீங்கள் கூறியது போல விளையாட்டில் எதிரி நாடுகள் விளையாடலாம். ஆனால் மனித உரிமையை மீறும் நாடுகள் விளையாடலாமா? அப்போ ஏன் ஸ்ரீலங்காவின் முதலாவது ரெஸ்ற் அணி தென்ன்னாபிரிக்கா சென்று விளையாடியதற்காக ஸ்ரீலங்காவின் அரசினால் தண்டிக்கப்பட்டனர்? மேலும் சிம்பாப்வேயின் அணியை ஏன் இங்கிலாந்து புறக்கணிக்க விரும்புகிறது? இங்கிலாந்து வீரர்கள் அரசு தவறும் பட்சத்தில் தாமே நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் என சொன்னதை மறுக்கிறீர்களா? குழந்தைகளுக்கு விளையாட்டை அர்ப்பணிப்பதிலும் விட மனித உரிமை மீறாமல் இருக்கவேண்டும் என்கின்ற தத்துவத்தை அர்ப்பணித்தல் மேல். அக்குழந்தைகள் பின்னாளில் மனிதாமிமானம் மிக்கவர்களாக வளருமல்லவா?

    என்னால் பல உதாரணங்கள் கூற முடியும். 1978 ஒலிம்பிக்கில் ஆரம்பிக்கலாமா பல்லி?

    Reply
  • msri
    msri

    மனித உரிமைகளை காக்கத் தவறும் நாடுகளை துடுப்பாட்டத்தில் இருந்து விலக்கிவைப்பது வழக்கம்! “மனித உரிமைகள்” விடயத்தில்>இலங்கை பற்றிய பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன? அத்தவறை இலங்கை செய்யவில்லை என்ற நோக்கிலிருந்தே>துடுப்பாட அனுமதித்திருக்கின்றார்கள்! உலகின் “மிகப் பெரிய ஐனநாயக நாடென்று” சொல்லப்படுகின்ற இந்தியாவே இலங்கையை பாதுகாக்கும் போது> பிரித்தானியா எம்மாத்திரம்! போராட்டக்காரர்கள்>இடம் பொருள் ஏவல் என்பனவற்றை கவனத்தில் கொண்டு ஆர்பாட்டம் செய்யவேண்டும்! உங்கள் ஆர்ப்பாட்டத்தால்> பிரித்தானிய அரசு இலங்கை அணியை திருப்பி அனுப்புமா? எம்மைப் பொறுத்தவரை> மகிந்தாவின் அரசு பாசிச சர்வாதிகார அரசே! அதை பரித்தானியா ஏற்கவில்லை! காரணம் அவரகள் இருவரும வர்க்க உறவினர்களே!

    Reply
  • palli
    palli

    சாந்தன் ஒலிம்பிக்கெல்லாம் எமக்கு வேண்டாம் ஆனால் பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் அணி தாக்கபட்ட உடன் முதலில் கண்டனம் தெரிவித்தது இங்கிலாந்து அணியும் அவுஸ்ரேலியா அணியும் என்பது உமது வியாக்கினத்துக்கு போதும் என நான் நினைக்கிறேன்; இதுவும் புரியாவிட்டால் தெருவில் நமக்கு யாரும் அடித்தாலோ திட்டினாலோ அவர்களை திருப்பி தாக்கமுடியாத கோழைகள் வீட்டில் வந்து பெண்டாட்டி பிள்ளைகளை தாக்குவது திட்டுவதுக்கு நிகரானதே உமது வாதம்; ஆகையால் உமக்கு இதைவிட புரியவைக்க பல்லி பள்ளி போக முடியாது; அதே போல் உமது போராட்டங்களுக்கு அந்த நாட்டவர் சிலரே ஆதரவு தந்தனர்; மகிழ்ச்சிதான், ஆனால் ஏன் பலர் ஆதரிக்கவில்லை என்பதை சிந்திக்க மறுப்பதே எமது தோல்வியின் அடிப்படை;

    சாந்தன் சட்டத்தை மீறினால் பொலிசார் அல்லவா கவனிக்க வேண்டும்; உன்மைதான் ஆனால் எம்மவரை பொலிசார் புலம் பெயர் கரகாட்டத்தில் கவனித்ததை தீபமும் GTVயும் அடிக்கடி போட்டு காட்டியதை தாங்கள் ஏன் கவனிக்கவில்லை என்பதை பல்லி அறிய விரும்பவில்லை;

    Reply
  • palli
    palli

    சாந்தன் உமக்கு பின்னோட்டம் விட்ட கையுடன் எனது நண்பனுடன் பேசும்போது சொன்ன கருத்தையும் உமக்காக தருகிறேன்; புலிகள் இந்தியாவில் ரஜீவ் காந்தியை கொலை செய்ய பின் ஈழ தமிழரை இந்தியாவில் விட வில்லையா? புலம் பெயர் தமிழர்தான் இந்தியா எமது அமைப்பை (புலிதான்) தடை செய்த இந்தியாவுக்கு நாம் ஒரு ஓஓஓ போடுவோம் என சொல்லி போகாமல் விட்டு விட்டீர்களா? இதெல்லாம் எமக்கு சகஸமாக இருக்கும் போது இந்த கிரிக்கெட் அணிமீது கடுப்படிப்பது குளத்தின் மீது கோபதால் எமக்கு நாமே சொறியை உருவாக்குவது போல் இல்லையா?
    தொடரும் பல்லி……..

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி
    சிலர் செய்ய வேண்டிய இடத்தில் செய்ய வேண்டியதைச் செய்ய மாட்டார்கள். செய்யக் கூடாத இடத்தில் செய்யக் கூடாததைச் செய்வார்கள். இதன் மூலம் வெறும் பரபரப்பை உண்டாக்குவதே இவர்களின் நோக்கம். இன்றுவரை ஆக்க பூர்வமாக இவர்கள் எதையாவது சிந்தித்துள்ளார்களா?? இவர்களிடம் போய் உங்கள் நேரத்தையும் …………..??

    Reply