கட்டுநாயக்கா ஏற்றுமதி வலயத்துக்கு அருகில் சுவீர் இந்திய ஹோட்டல் நிறுவனத்துக்கு காணி ஒன்றை வழங்க அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.
முதலீட்டு அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
குத்தகை அடிப்படையில் 50 வருட காலத்துக்கு ஐந்து கோடியே 58 இலட்ச ரூபாவுக்கு இக்காணி வழங்கப்படுகிறது. காணி வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் குறிப்பிட்ட தொகையின் 25 வீதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் செலுத்த வேண்டும்