விசேட தொழில்நுட்ப பயிற்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி, பாடசாலையை விட்டு வெளியேறிய ஐயாயிரம் இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு தொழில் பயிற்சி நெறிகளை ஆரம்பித்திருப்பதாக கல்லூரி அதிபர் எம்.யோகராஜன் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் வடமராட்சி மாணவர்களின் நன்மைகருதி யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரியும் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகமும் இணைந்து வடமராட்சி சுருக்கெழுத்துக்கழக தொழில் பயிற்சிக்கழகத்தில் ஐந்து கற்கை நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இக்கற்கை நெறியில் இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஆறாம், ஏழாம் திகதிகளில் யாழ்.தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
பயிற்சி நெறிகள் மூன்று மாதகாலத்துக்குரியதாக நடத்தப்படுமெனவும் பகுதிநேர அலுவலக கணினிப் பயிற்சி நெறி, ஆங்கில மொழி, சிங்கள மொழி பகுதிநேர கற்கை நெறி, தமிழ் சுருக்கெழுத்து பகுதி நேரம், முழுநேரக் கற்கை நெறியாகவும் நடத்தப்படவுள்ளது.
முதலாவது அணியாக மின்தட்டு, நீர்க்குழாய் பொருத்துதல், மேசன் வேலை, கணினிகற்கை நெறி, மோட்டார் வாகனம் திருத்துதல் ஆகிய பயிற்சி நெறிக்கு 900 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி நெறிகள் ஆரம்பமாகியுள்ளன.