சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குத்துறை அமைச்சுக்கு 20 அம்பியுலன்ஸ் வண்டிகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
நாட்டில் நிலவும் அவசரத்தேவைக்கு ஏற்ப டெண்டர் முறையின்றி குறைந்த விலையை சமர்பித்துள்ள உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனமான மைக்ரோ நிறுவனத்திடம் இவற்றை உடனடியாக கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
12 வீத வற்வரி உட்பட 49 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் 20 அம்பியுலன்ஸ் வண்டிகளை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.