நாட்டில் உள்ள அனைத்து சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2ஆம் மற்றும் 3ஆம் தவணைக் காலம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திருத்தத்தின்படி சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2ஆம் தவணைக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி முடிவடைவதோடு 3ஆம் தவணைக்காக மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதென அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2008.11.04 இல் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தின்படி இவ்வருடம் ஜுலை மாதம் 31ஆம் திகதியே இரண்டாம் தவணைக் காலம் நிறைவுபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.