இங்கி லாந்தில் நடைபெறவுள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போதான பாதுகாப்பு நடவடிக்கை, கிரிக்கெட் விளையாட்டு சரித்திரத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
லண்டனில் நடைபெறவுள்ள உலக் கோப்பை 20-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் புதன்கிழமை மாலை மோதின.
இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை போட்டிகளின் போது பாதுகாப்புக்கே மிக அதிக அளவில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
இரண்டு மாதங்களுக்கு பாகிஸ்தானுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் லாகூர் நகரிலுள்ள விளையாட்டு மைதானத்துக்கு சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிதாரிகளால் தாக்கப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட முதல் தாக்குதல் அதுதான்.
இதில் ஆறு போலீசார் பலியாயினர், ஏழு வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன, குறிப்பாக மிக முக்கியமான போட்டிகள் என்று கருதப்படும் போட்டிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் போட்டிகள் இப்படி பட்டியலிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பின்னரும், லாகூரில் கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் நடைபெற்ற பின்னரும், இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் முறையாக ஒரு போட்டியில் சந்தித்தன.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ளள இந்த 20-20 உலகக் கோப்பை போட்டிகள் வெள்ளிக்கிழமைதான் தொடங்குகின்றன என்றாலும் போட்டிகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலலுத்தப்படுவததாக போட்டிகளுக்கான இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி தெரிவிக்கிறார்.