அமரர் அமரசிறி தொடங்கொடவின் இறுதிக் கிரியைகள் இன்று (04) வியாளக் கிழமை காலி கராப்பிட்டியில் நடைபெறுகிறது. நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சரான அமரசிறி தொடங்கொட கடந்த சனிக்கிழமை இரவு காலமானார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பாராளுமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, கராப்பிட்டிய இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அன்னாரின் மறைவு குறித்து பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள இரங்கல் செய்தியில் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சராகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராகவும் பணியாற்றிய அமரசிறி தொடங்கொடவின் இழப்பு இலங்கை மக்களுக்குப் பேரிழப்பாகும். குறிப்பாக காலி மக்களுக்கு ஈடுசெய்ய முடியாததாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.