228 பயணிகளுடன் நேற்றுப் பயணம் செய்துகொண்டிருக்கையில் காணாமல்போன பிரான்ஸ் நாட்டின் விமானம் அத்லாண்டிக் கடலில் விழுந்து நொருங்கியுள்ளதாகவும் அதில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எயார் பிரான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் பிரேஸிலின் ரியோடி ஜெனிரோ விமான நிலையத்திலிருந்து பாரிஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்களில் 82 பெண்களும், 9 குழந்தைகளும் அடங்குவதாக எயார் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.