தாய் லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 8ஆவது ஆசிய பேஸ்போல் சம்பியன்சிப் போட்டியின் இறுதிச் சுற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இலங்கை அணி பெற்றுள்ளது. மலேசிய அணியை 9-1 எனும் புள்ளி வித்தியாசத்தில் தோற்கடித்தன் மூலம் இறுதிச் சுற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது.
இலங்கையின் பேஸ்போல் வரலாற்றில் இறுதிச் சுற்றுக்கு இலங்கை அணி தெரிவுசெய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
முதல் போட்டியில் 3-1 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடன் 10-0 என்ற புள்ளி வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அரைஇறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்னுமொரு போட்டியில் பாகிஸ்தானும் ஹொங்கொங் அணியும் பங்குபற்றவுள்ளன.
இச்சுற்றுப் போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, ஹொங்கொங், மியன்மார் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.