தமிழ் மக்களின் அதிகபட்ச அரசியல் அபிலாசைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து வெற்றிவாகை சூடியிருப்பதாய் இலங்கை அரசு கூறியிருக்கிறது. சிங்கள பௌத்த இனவாதம் மிகப்பெரிய தமிழ் இனப் படுகொலையை நடாத்தி போரை வெற்றி பெற்றதாக அறிவித்து நாடு முழுவதும் கொண்டாட்டங்களை நடாத்தி வருகிறது.
தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வை முன்வைக்காது இராணுவ ரீதியான தீர்வை முன்தள்ளி பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்து அவர்களது போராட்டத்தை நசிக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது.
அனைத்து உலக சமூகமும் கண்மூடியிருக்க தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். இறுதியாக காயப்பட்ட மக்கள், காயப்பட்ட போராளிகள், போராளிக் குடும்பங்கள், சரணடைந்த போராளிகளை பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியே போகவிடாது இலங்கை இராணுவம் படுகொலையை நடாத்தி போரை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாய் தெரிவித்திருக்கிறது. எஞ்சியவர்கள் அகதிச்சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி வருகிறார்கள். தமிழ் மக்கள், சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பிற்கூடாக பாரம்பரிய நிலங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களுக்குள் நிரந்தரமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு முன்னின்று செயற்பட்டு வருகிறது.
சிங்கள பௌத்த இனவாதம், இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை எந்தவொரு விட்டுக்கொடுப்புமில்லாமல் கட்சி பேதமின்றி தனது அரசியல் – இராணுவ ஒடுக்குமுறையை செயற்படுத்தியே வருகின்றது. இனியும் தமிழ் மக்களின் மீதான அடக்குமுறை தொடரவே போகிறது. சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்கு வைத்த தீர்வு இனப்படுகொலையே. இதற்கூடாக பெரும்பான்மை தமிழ் மக்களை தமிழீழ தனிநாடு நோக்கி இலங்கை இனவாத அரசு மீண்டும் தள்ளியுள்ளது.
எமது கடந்தகால தமிழர் அரசியல் வரலாறு என்பது கசப்பான பல அனுபவங்களை சுமந்திருக்கிறது. அவற்றை ஆரோக்கியமான முறையில் விமர்சித்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை முன்நிறுத்தி வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் இணைய வேண்டிய கடப்பாடு அனைத்து தமிழர்கள் மீதும் இன்று சுமத்தப்பட்டுள்ளது.
ஈழத் தமிழ் மக்களின் போராட்டம் இன்றோடு முடிந்ததாக சிங்கள பௌத்த இனவாதம் கொக்கரிக்கலாம். அதை அப்பாவி சிங்கள மக்களும் நம்பலாம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கான தேவை இன்னும் அழியவில்லை. அதற்கான தமிழ் மக்களின் ஆதரவு இன்னும் மழுங்கவுமில்லை.
எமது மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் பலதளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய உச்ச நிலையில் நாம் இன்று இருக்கின்றோம். உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள், தொழிலாளர்கள், மனிதவுரிமைவாதிகள், செயற்பாட்டாளர்கள், புத்திசீவிகள், பல்வேறு இனக்குழுமங்கள், சமூக உரிமை அமைப்புகள், அரசியல் தாபனங்கள் என பல்வேறுபட்ட உலக மக்களின் ஆதரவை தமிழர் சுய நிர்ணய உரிமைக்காய் வென்றெடுக்கப்படவேண்டிய தேவை இன்று உண்டு. அதற்கான வேலைத்திட்டங்களையும் போராட்டங்களையும் தொடரவேண்டிய தேவை எம்முன்னுள்ளது.
போராட்டத்தில் இராணுவ வெற்றிகளை மட்டுமே மையப்படுத்திப் பார்க்காது, இலங்கை இராணுவ வெற்றிகளை நிலைகுலையச் செய்யக்கூடிய அரசியல் நடவடிக்கைகளை தமிழ் மக்களால் செய்யமுடியுமென இதுவரை காலமும் உலகெங்கிலும் நடந்த போராட்டங்களுக்கூடாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தீர்வென்பது ஈழத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையால் மட்டுமே சாத்தியமாய் உள்ளது. இலங்கை சிங்கள பௌத்த இனவாத ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்கள் மீட்கப்படவேண்டும். அவர்களின் பாதுகாப்பும், மனிதவுரிமையும், வாழ்வும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.
எமது இலக்கு நோக்கிய போராட்டத்தில் எம் முன்னுள்ளது வெற்றிகள் மட்டுமே அல்ல தோல்விகளும் தான். அதை புரிந்து கொள்வதும் அரசியல் பின்னடைவுகளை விளங்கிக் கொள்வதும் எமது அடுத்தகட்ட நகர்வுக்கு எம்மை திடமாக முன்தள்ளும். சிங்கள பௌத்த இனவாதம் இலங்கையிலிருந்து நீக்கப்படும் வரை தமிழ் மக்களின் போராட்டம் தொடரவே செய்யும்.
சிங்கள பௌத்த இனவாதம் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை நிலைகுலையச் செய்ய பல பிரயத்தனங்களை செய்துவருகிறது. இனவாத சிங்கள அரசை சர்தேச ரீதியில் அம்பலப்படுத்தி அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய தேவையுள்ளது.
பன்முகத்தன்மையுடன் கூடிய அரசியல் ஜனநாயக வழிகளுக்கூடாக ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காய், உலகத் தமிழ் மக்கள் ஒன்றிணையவேண்டிய காலமிது. உலகம் தழுவிய ஒன்றிணைந்த போராட்டத்திற்கூடாக மட்டுமே சிங்கள பௌத்த பேரினவாதத்தை வெற்றிகொள்ள முடியும்.
சிங்கள அரசின் கொடூர அடக்குமுறையால் படுகொலை செய்யப்பட்ட போராளிகள், பொது மக்கள் அனைவருக்கும் எமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம்!!
இலங்கை அரசை அம்பலப்படுத்துவோம்!!
ஈழத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை வென்றெடுப்போம்!!!
தமிழர் வகைதுறைவள நிலையம் – தேடகம்
மே 18, 2009
ரொரன்டோ, கனடா.
accu
உங்கள் கடந்தகாலத்தின் சிதையாத ஒற்றுமையும் மிகக் கட்டுக்கோப்பான செயல்பாடுகளும் விடுதலைப்புலிகளுக்கு கொஞ்சமேனும் குறைவில்லா உங்கள் வீரியமான சாதனைகளும் உங்கள் மேல் ஒட்டுமொத்த உலகத்தமிழரும் நம்பிக்கை வைத்திருக்கிறர்கள். எங்களின் நம்பிக்கை நட்சத்திரம் இனி நீங்கள்தான். இளையதலைமுறையை புறந்தள்ளி நீங்கள் எழுங்கள்! தேடகத்தின் தாகம் தமிழீழத் தாயகம்!
நிதியுதவி எப்படிச் செய்வதென அறிவியுங்கள்.
பார்த்திபன்
எத்தனை நாளைக்குத் தான் தமிழீழம் என்ற கோசத்தை வைப்பது. நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய முன் வந்தால் நான் பூரண ஆதரவளிக்கத் தயார். அதாவது முழு இலங்கையையும் தமிழீழ அரசின் பிடியின் கீழ் கொண்டு வந்து, சிங்கள மக்களுக்கு ஏதாவது ஒரு தீர்வுத் திட்டத்தை வைக்கும் நிலைக்கு எமது போராட்டத்தை உயர்த்துவோம். அந்த வகையில் எனது பாரிய பங்களிப்பைச் செய்வதற்கு நான் தயார்……
BC
Accu, முக்கியமான விடயத்துக்கு வந்துள்ளீர்கள். (நிதியுதவி எப்படிச் செய்வதென அறிவியுங்கள்.)
KUNALAN
உங்கள் வீட்டிலிருந்து வலதுகைப் பக்கமாக ஒரு கிலோ மீட்டர் நடந்தால் ஒரு குறுக்கு சந்து வரும்/ அதிலிருந்து இடதுகைப் பக்கமாகத் திரும்பி நூறு மீட்டர் நடந்தால் ஒரு பாழடைந்த மண்டபம்வரும்/ அந்த மட்டபத்தின் முன்னால் மன்னர் காலத்துக் குப்பைத் தொட்டி ஒன்றிருக்கும்/ அதற்குள் உங்கள் பணப் பையை வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடவுங்கள். அதற்குப் பின் தேடக நிதிதிரட்டும் படை வந்து எடுத்துச் செல்வார்கள். .
குணாளன்.
palli
என்னப்பா இது பங்கு இறைச்சி கடையா? அல்லது விடுதலை அமைப்பா?? இப்படி ஆள் ஆளுக்கு பங்கு போடிறியள்;
பாரிஸிலும் ஏதோ அமைதி புலிகள் என செயல்பட போவதாக கேள்வி; அடங்காத தமிழன் அன்று; அமைதி புலிகள் இன்று; நளை???
பார்த்திபன்
// அந்த மட்டபத்தின் முன்னால் மன்னர் காலத்துக் குப்பைத் தொட்டி ஒன்றிருக்கும் – குணாளன்//
குணாளன், அந்தக் குப்பைத் தொட்டிக்கு அருகிலா உங்க வீடு உள்ளது??
velli
“அவர்களது போராட்டத்தை நசிக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது.”
“அவர்களின் பாதுகாப்பும் மனிதவுரிமையும் வாழ்வும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.”
எங்களுக்காக நீங்கள் இதுவரை செய்ததே போதும்.ஆளை விடுங்கடா.உயிராவுதல் மிஞ்சும்.
KUNALAN
அந்தக் குப்பைத் தொட்டியே நம்ம (தேடகம்) வீடுதாம்பா.
குணாளன்
குசும்பன்
தேடகத்தின் தாகம் தமிழீழத் தாயகம்!.டாக்டர் மு.க.ஸ்டாலின் வாழ்க!,டாக்டர்.மு.க.எஸ்.உதயநிதி வாழ்க!.ஜனனி ஜனநாயகம் வாழ்க!-அவருக்கு பிறக்கப் போகும் குழந்தை வாழ்க!.மாவை சேனாதிராஜா பேரப்பிள்ளைகள் வாழ்க!,இ.ரா.சம்பந்தன் பேரப்பிள்ளைகள் வாழ்க!.உழைத்தவன்,உருகுலைந்தவன்,உயிரை விட்டவன்,எல்லாம்,வாயில் வெரும் விரலை வைத்து சூப்பிக் கொண்டிருங்கள்.ஒரு வேளை ராஜபக்ச்சேவும்,கருணாவும் சேர்ந்து பிரபாகரனை உயிரோடு கொண்டுவந்து நிறுத்தினால் என்ன செய்வீர்கள்?.
மாயா
//palli on June 2, 2009 12:42 pm என்னப்பா இது பங்கு இறைச்சி கடையா? அல்லது விடுதலை அமைப்பா?? இப்படி ஆள் ஆளுக்கு பங்கு போடிறியள்;
பாரிஸிலும் ஏதோ அமைதி புலிகள் என செயல்பட போவதாக கேள்வி; அடங்காத தமிழன் அன்று; அமைதி புலிகள் இன்று; நளை???//
மெளனப் புலி
புலிகளின் தாகம் தமிழரில்லாத் தாயகம்
பார்த்திபன்
//ஒரு வேளை ராஜபக்ச்சேவும்,கருணாவும் சேர்ந்து பிரபாகரனை உயிரோடு கொண்டுவந்து நிறுத்தினால் என்ன செய்வீர்கள்?.- குசும்பன் //
உடலத்தை பிடித்து நிறுத்துவதற்கு இரண்டு பேராவது தேவையென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கின்றது. அது போதும்.
சந்தனம்
நான் நினைக்கிறேன் எனி தீர்வுதிட்டத்தை புலம்பெயர்ந்த தமிழ் நாட்டுபற்றாளர்கள் தங்களிடம் தான் தரவேண்டும் என்று கொடிபிடிக்கபோகிறார்கள் அந்தமக்களை யார்தான் காப்பாற்றுவார்கள்.
நண்பன்
//ஒரு வேளை ராஜபக்ச்சேவும்,கருணாவும் சேர்ந்து பிரபாகரனை உயிரோடு கொண்டுவந்து நிறுத்தினால் என்ன செய்வீர்கள்?.- குசும்பன் //
எங்களுக்கும் சாவில்லை என மகிழ்வோம்.
Sathyam
LTTE representative want to be in Toronto (Thedaham) is very disappointed about lost of LTTE leadership. What they can do try their best to show they are the one behind LTTE activities in Toronto, but that is not always right.