ஸ்டாலினு‌க்கு துணை முத‌ல்வ‌ர் பத‌வி கொடு‌த்தது ஏ‌ன்- கருணா‌நி‌தி ‌விள‌‌க்க‌ம்

stalin-karuna.jpgஇது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த பிப்ரவரி திங்களில் இருந்து சுமார் நான்கு மாத காலமாக என் உடலில் தவிர்க்க முடியாததும் அபாயம் நிறைந்ததுமான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக உடல் நலிவுற்று-இன்னமும் நடக்க முடியாமல், சக்கர நாற்காலியில் தான் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.

தேர்தல் பிரசாரத்துக்காக திருச்சி கூட்டத்திற்கு சென்றதாலும், வேறு சில மண விழாக்களில் பங்கேற்றதாலும் மீண்டும் உடல் நலிவுற்று, திரும்பவும் மருத்துவமனையில் பத்து நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. தேர்தல் பிரசாரக் கூட்டங்களைத் தவிர்க்கவும் ஒரு சூழ்நிலை உருவானதை அனைவரும் அறிவர்.

இந்த உடல் நலிவுடன் அரசு நிர்வாகப்பணிகளில் முழு கவனம் செலுத்த இயலவில்லை. வாரம் ஒன்றுக்கு நூறு கோப்புகளுக்குக் குறையாமல் பார்த்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வாரியப்பணிகள் மற்றும் அரசுத்துறை பணிகளை எல்லாம் அன்றாடம் கலந்து பேசி முடிவெடுத்து செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு கவனிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

எனவே இந்தப் பணிகளை நிதியமைச்சர் பேராசிரியர் ஏற்று நடத்த முடியுமா என்று அவரிடம் விவாதித்ததில் அவருக்கும் உடல் நிலை இடந்தராத நிலைமையை எடுத்துச்சொல்லி, அதன் பிறகு நாங்கள் இருவரும் கலந்து பேசி இரண்டொரு முக்கிய துறைகளின் பொறுப்புகளை மட்டும் நான் வைத்துக் கொள்வதென்றும் பேராசிரியர் அவையின் முன்னவராகவும், நிதி அமைச்சராகவும், தொடர்வதென்றும், எங்கள் இருவருக்கும் அடுத்து இப்போது பகிர்ந்தளிக்கப்படுகிற இலாக்காக்களையும் பொறுப்பேற்று துணை முதல்வர் என்ற நிலையில் மு.க.ஸ்டாலின் செயல்படுவதென்றும் முடிவு செய்து அதற்கான அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • msri
    msri

    கலைஞரின் நீண்டநாள் கனவு நனவாகின்றது! இப்போ துணைமுதல்வர் அடுத்தது முழுமுதல்வர்! இதற்கு இவ்வளவு காரணங்கள் சொல்லவேண்டுமா? நீங்கள் அரசியலில் ஈடுபட்ட நாள் முதல் “குடும்ப அரசியல்” பற்றி சிந்தித்ததில்லையே! அண்ணாவின் தம்பியல்லவா?

    Reply
  • நண்பன்
    நண்பன்

    சரியான தேர்வு.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    குடும்பத்தலைவன் என்றால் இப்படித் தான்.எதிர்காலத்தில் தமது குடும்ப வாரிசுகளுக்கு நிலையானது ஏதாவது செய்து வைக்கவேண்டாமா?
    நாடு- அரசியல் அதெல்லாம் வேறு சமாச்சாரம்….முங்க…!.இனிமேல் சனங்கள் கத்துக்கிட்டாத் தான் நாம் ஏதாலும் செய்யமுடியுங்க. அது வரைக்கும் ஜெயாக்கா இருக்கிறா கேரளா கர்நாடகம் தண்ணீர் பிரச்சனை இதை போட்டு அறுக்க மாட்டனா? இல்லாட்டி இருக்கவே இருக்கிறது எமது உயிரான “தமிழ்-மூச்சு” அந்த கம்பத்தில் ஏறி எனது வித்தையை காட்டமாட்டேனா? சக்கரநாற்காலியில் நான் இருக்கிறதால் இதுக்கு மேலே உங்களுக்கு விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன்.

    Reply
  • மாயா
    மாயா

    ஒரு மகன் டில்லியில்
    ஒரு மகன் தமிழ் நாட்டில்
    கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஸ்டாலின் ஏதோ நேற்று எம்.எல்.ஏ ஆகி, இன்று துணை முதலமைச்சர் ஆகிவிடவில்லை. நீண்ட கால அரசியல் பின்னணியும் அனுபவமும் பெற்றவர். அப்படியிருந்தும் இம்முறை தான் அவருக்கு மந்திரிப்பதவி கூட கலைஞர் வழங்கியிருந்தார். அதன் பின் தற்போது துணை முதல்வர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இதை விமர்சிக்க வேண்டிய தேவையோ அவசியமோ எம்மவர் எவருக்கும் கிடையாது. பிரபாகரன்; விமானப்படையை கட்டியெழுப்ப உதவிய பலரைப் புறந்தள்ளி தன் மகனை விமானப்படைத் தளபதியாக்கிய போது எத்தனை பேர் அதனை விமர்சித்தோம். மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது தான் எம்மவர் பலரின் நிலை. இந்த இலட்சணத்தில் அடுத்தவரை விமர்சிக்கும் தகுதி எமக்குண்டோ??

    Reply
  • msri
    msri

    உடன்பிறப்புக்களுக்கு கலைஞரின்கடிதம்!
    உடன்பிறப்பே!
    நான் என் குலக்கொடிக்கு துணைமுதலவர் பதவி வழங்கியதற்கு> என் எதிரிகளே எனை வாழ்த்திட> இங்கிலாந்தின் தேசமநெற் இணையத்தில் சிலர் எனை ஏளனம் செய்திட> என் உயிரினும் மேலான இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்பொன்று> என்தலைவன் கலைஞனை> மைந்தனை குறைசொல்ல உங்களுக்கென்ன தகுதியென்று அவர்களின் வாயையே அடைத்திற்று! உடன்பிறப்பே! நீ என் குடும்ப அரசியலின் பொதுநலத்தை> ஏன் என்சமதர்ம அரசியலின் ஆழமான அர்த்த்ததை! தமிழ்இனப் போராளி என்பதை கண்டறிந்து கசடற கற்றதை இவர்கள கற்கவில்லை! உன்போன்ற இரத்தங்கள் உள்ளவரை நான் என்றும் தொப்புள்கொடி உறவுகளின் கோவலனே! உன் கடமையை நான்மெச்சுகிறேன் உடன்பிறப்பே!

    Reply