பிரித்தானியாவில் ரிம் மாற்றின் 12 ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம்

rim-marteen.jpgஇலங்கையில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் அவலங்களை தடுத்து நிறுத்தி அங்குள்ள தமிழ் மக்களைக் காப்பாற்றக் கோரி பிரித்தானியாவில் ரிம் மாற்றின் முன்னெடுக்கும் உண்ணாநிலைப் போராட்டம் 12 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தன்னுடைய இந்த போராட்டத்திற்கு சர்வதேசம் ஒரு பதில் தரும் என்ற நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தன்னுடைய போராட்டத்தை தொடர்வேன் என ரிம் தெரிவித்துள்ளார்.  தனக்கு துணையாக அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்ளும் தாய்மாரை தான் நன்றி உணர்வுடன் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரித்தானியா வாழ் தமிழ் இளையோரால் மேற்கொள்ளப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் தமிழ் மக்களுக்கு ஒரு அமைதியான நிரந்தர முடிவு வரும் வரை தொடரும் எனவும் இதற்கு அனைத்து மக்களும் ஆதரவு தரவேண்டும் எனவும் கேட்டுள்ளனர் ஏற்பாட்டாளர்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    எள்ளோடு சேர்ந்து எலிப்புழுக்கையும் காயுது என்பது இதைத் தானோ??

    Reply
  • மாயா
    மாயா

    பாவம் , தமிழர்கள் தலைவன் உயிரோடு இருக்கிறான் என்று கொண்டாட்டத்தில்…அன்னியனோ, தமிழருக்காக நடுத் தெருவில்…பாவம். தமிழன் குணம் அறியாமல் தளர்கிறான்.

    Reply
  • மேளம்
    மேளம்

    தங்கட இருப்ப தக்கவைச்சிக்கொள்ள இலங்கையத் தவிர வேற எல்லா நாட்டிலையும் >தன்மானத் தமிழன்>? தலைவனைக் காப்பாத்த நல்ல பெரிசாயும் சிறிசாயும் உண்ணா விரதக் கடை விரிச்சான்… சில இடத்துல நல்ல யாவாரம் போனது சில இடத்துல… கொஞ்சம் அப்படி இப்படித்தான்… ஆனா இந்த >ரிம் மாற்றின்> எண்ட வெளிநாட்டவர் தமிழனுக்காக ஏதோ செய்கிறார் என்னும்போது நெஞ்சு கனக்குது.. கூடுமானவரை மனதார வாழ்த்துவோம்.

    மேளம்

    Reply
  • thevi
    thevi

    இந்த ரிம் மார்டின் முன்னாள் என்ஜிஓ என்பது தெரியுமோ?

    புலன் பெயர்ந்தவர்கள் தங்கள் விடுதலை வியாபாரத்திற்கு வட கிழக்கு ஏழை மக்களின் குழந்தைகளை கூலிக்கு அமர்த்தினார்கள் . இப்போ வெள்ளைக்காரன்.

    யாரையும் ஏவி விடுவதும் பாவிப்பதும் புலன்பெயர் வர்க்கத்தின் குணம்.

    Reply