கோவை அருகே ராணுவ வாகனம் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் மேலும் 6 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
இலங்கைக்கு ஆயுதங்கள் கொண்டு செல்வதாகக் கூறி கோவை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் கடந்த 2-ம் தேதி பயிற்சி முடித்த வீரர்களை ஏற்றி வந்த ராணுவ வாகனங்கள் மீதுசிலர் தாக்குதல் நடத்தினர்.
போலீசார் வழக்கு பதிந்து பெரியார் தி.க. பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட 35 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சிலரை தேடி வந்தனர். இந்நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 6 பேரை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.