ஈரான் உதவியுடன் 8 ஆவது கிராமிய மின்சார அபிவிருத்தித் திடத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை மின் சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ. டீ.ஜே. செனவிரத்ன முன்வைத்திருந்தார்.
இத்திட்டத்துக்கு 106.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1000 கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்கப்படும். அத்துடன் ஒரு லட்சத்து 80 ஆயிரம் புதிய பபவனையாளர்கள் உள்வாங்கப்படுவர்.