பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் அனா இவானோவிச் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீன தை பேவை சேர்ந்த ஜியா ஜங் சுவாங் ஜோடி, துருக்கியின் சேனக்லு, பெல்ஜியத்தின் யானினா ஜோடியை சந்தித்தது.
இதில் சிறப்பாக விளையாடிய சானியா ஜோடி முதல் செட்டை 7-5 எனவும், இரண்டாவது செட்டை 6-1 எனவும் கைப்பற்றியது. இறுதியில் 7-5, 6-1 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.