பாதாள உலகக் குழுவை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

Gun 01பாதாள உலகக் குழுவை சேர்ந்த ஜே.எஸ். குமார என்பவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிகாலை கொழும்பு கல்கிசையில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட இவர் தன்னிடம் உள்ள ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டுவதாகக் கூறி பொலிஸாரை அங்கு கூட்டிச் சென்றார்.

அச்சமயம் அவர் பொலிஸாரை நோக்கி கைக் குண்டை வீச முயன்றதாகவும் பொலிஸார் பதிலுக்கு அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் களுபோவில ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமானார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • மாயா
    மாயா

    இனி ஆயுத குழுக்களுக்கு இலங்கை மரணத்தைத்தான் வெகுமதியாக அளிக்கப் போகின்றன. அது தமிழ் – சிங்கள – முஸ்லீம் எனும் பேதமின்றி நடக்கும். அனைத்து ஆயுததாரிகளும் இனி அரச ஆயுததாரிகளே.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    இலங்கையில் மரணதண்டனை இல்லையாம். சிறுகளவுக்குக் கூட தந்திக்கம்பங்களிலும் தெருக்களிலும் மரணதண்டனை தானே விதிக்கப்பட்டது. புலிகளின் அஜாரகம் ஒழிந்தால் மற்றய ஆயுதம்தாங்கிய வன்முறையாளரை ஒடுக்கவேண்டிய கடைப்பாடு இலங்கை அரசுக்கு உண்டு. புலிகளின் இடத்தைப்பிடித்து கீரோயிசம் காட்ட பலர் முயலலாம்.

    Reply