வவுனியா செட்டிகுளம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. எஸ்.கனகரட்ணம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை விசாரணைக்காக பொலிஸாரால் கொழும்புக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார். வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் அங்கு தங்கியிருந்த இவர் வன்னியிலிருந்து கடந்த வாரம் வவுனியா வந்தார்.
செட்டிகுளம் முகாமில் தங்கியிருந்த இவரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழு விசாரணைக்கெனக் கூறி கொழும்புக்கு கூட்டிச் சென்றுள்ளது.இவரது குடும்பத்தவர்கள் தற்போது செட்டிகுளம் முகாமில் தங்கியுள்ளனர்.