12 வயது சிறுவனைக் கடத்திச் சென்றது, ஒருவரை துப்பாக்கியால் தாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சரணகுணவர்த்தனவையும் மற்றும் நால்வரையும் பிணையில் செல்ல கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் அனுமதி வழங்கினார். இவர்களை தலா 5 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல நீதிபதி அனுமதித்தார்.
சந்தேக நபர்களின் பிணை அனுமதி விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிபதி இதற்கு அனுமதி வழங்கினார். அரச தரப்புச் சட்டத்தரணி இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை