“வடக்கின் வசந்தம்” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வடக்கில் உள்ள 30 பாடசாலைகள் 1050 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட வுள்ளன.
ஆசிய அபிவிருத்தித் வங்கியின் நிதி உதவியின் கீழ் நடைமுறைப் படுத்தப்படவுள்ள பாடசாலை அபிவிருத்தி திட்டத்தில் முதற்கட்டமாக வடக்கிலும், கிழக்கிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் பெயர்களையும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் வெளியிட்டுள்ளார். வடக்கில், வவுனியா தெற்கு சைவப் பிரகாச மகளிர் வித்தியாலயம், ஓமந்தை, புத்துக்குளம் மகா வித்தியாலயம், வலிகாமம் கிழக்கு புத்தூர் சோமாஸ்கந்த வித்தியாலயம், வலிகாமம் வடக்கு சுன்னாகம் ஸ்கந்தவரோதயம் வித்தியாலயம், கரவெட்டி வடக்கு கரவெட்டி விக்னேஸ்வரா வித்தியாலயம், தென்மராட்சி வரணி மகா வித்தியாலயம், வலிகாமம் மேற்கு யாழ். விக்டோரியா வித்தியாலயம், மன்னார் புனித அன்னம்மாள் மத்திய மகா வித்தியாலயம், மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம் போன்றவையும்,
கிழக்கில் அம்பாறை தெஹியத்தகண்டிய மெதகம மகா வித்தியாலயம்,
திருக்கோவில், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், திருகோணமலை கம்பலாகமுவ சிராஜ் முஸ்லிம் மகா வித்தியாலயம், பதவி ஸ்ரீபுர பலுகஹ வங்குவ மகா வித்தியாலயம், கந்தளாய் அக்போபுர மகா வித்தியாலயம், மட்டக்களப்பு கோரளைப்பற்று விக்னேஸ்வரா வித்தியாலயம், மண்முனை தெற்கு மற்றும் மேற்கு முதலைக்குடா மகா வித்தியாலயம், மட்டக்களப்பு கோறளைப்பற்று பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயம் ஆகியன முதற்கட்டமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.