கொழும்பு நகரின் போக்குவரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்வற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான பிரேரணையை புனித பூமி அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்திருந்தார்.
இதற்கிணங்க ஜப்பானின் வரையறுக்கப்பட்ட ஒரியன்டல் கன்ஸ்டல்டன்ட் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட க்றீன்டெக் கன்ஸ்டல்டன்ட் தனியார் நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக 201.6 மில்லியன் ஜப்பானிய யென்னும் 145 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.