புலிகளின் பிடியிலிருந்தபோது ஊடகங்களுக்குத் தவறான தகவல்களை தெரிவித்த மூன்று டாக்டர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவதற்குச் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சு முடிவு செய்துள்ளது. புலிகளின் பிடியிலிருந்த டாக்டர்களான சண்முகராஜா, சத்தியமூர்த்தி, வரதராஜா ஆகியோர் உள்ளூர் வெளியூர் ஊடகங்களுக்குத் தவறான தகவல்களைத் தெரிவித்தமை குறித்தே விசாரணைகள் நடாத்தப்படவிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
இந்த விசாரணைகளுக்கான ஒழுங்குகளை அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹவத்த லியனகே மேற்கொண்டிருக்கிறார். தற்போது இந்த மூன்று டாக்டர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.